இளையான்குடி,
இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலத்தில் மாற்றுத்திறனாளிகளின் கிரிக்கெட் போட்டி, குண்டு எறிதல் போட்டி மற்றும் இசை நாற்காலி, கவன் மூலம் பலூன் உடைக்கும் போட்டி, நீர் நிரப்பும் போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு தமிழரசி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பரிசுகளை வழங்கி பேசினார். மாநில மாற்றுத்திறனாளிகளின் நல உறுப்பினர் புஷ்பராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், மாவட்ட பிரதிநிதி காளியப்பன், செயலாளர் சத்தியேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி காளிமுத்து, நெசவாளர் அணி சாரதி என்ற சாருஹாசன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஊராட்சி தலைவர் மலைராஜ், தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி சுப.அன்பரசன், கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.