போலீஸ் அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ்
போலீஸ் அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட சிவகாசி உட்கோட்டத்தில் நடைபெற்ற குற்றச்சம்பங்களில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுத்து மற்றும் காணாமல் போன பொருட்களை மீட்டு கொடுத்த சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜ், செல்வராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினருக்கு கலெக்டர் ஜெயசீலன் சுதந்திரதினவிழாவில் பாராட்டி நற்சான்றிழ் வழங்கினார். பாராட்டு நற்சான்றிதழ் பெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.