சேலம் குரங்குச்சாவடியில் கிரேன் மோதி காவலாளி பலி

சேலம் குரங்குச்சாவடியில் கிரேன் மோதி காவலாளி பலியானார்.

Update: 2022-06-01 21:12 GMT

சூரமங்கலம்,

சேலம் சாமிநாதபுரம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 61). இவர் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மாரிமுத்து நேற்று காலை வேலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். குரங்குச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கிரேன் வாகனம் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் மாரிமுத்து பலத்த காயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சூரமங்கலம் போலீசார் கிரேன் வாகன டிரைவரான அழகேசனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்