கல்குவாரியில் வெடி மருந்து வைப்பதால் வீடுகளில் விரிசல்; கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்

கல்குவாரியில் அதிக அளவில் வெடிமருந்து வைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2023-10-09 19:13 GMT

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரூ.5 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

ஆலங்குளம் யூனியன் குறிச்சான்பட்டி மற்றும் கரையாளனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செடி, கொடிகளை கொண்டு வந்து காட்டி மனு கொடுத்தனர். அதில், எங்களது பகுதியில் மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு கற்கள், ஜல்லி தயாரிக்கப்பட்டும் வருகிறது. அளவுக்கு அதிகமாக குழி தோண்டப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. அதிகளவில் வெடிமருந்து பயன்படுத்தப்படுவதால் அதன்மூலம் நில அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த குவாரியை ஆய்வு செய்து இதனை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்