போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - காவல்துறையினருக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்

மாநிலத்தில் அமைதியை காக்கும் பணியை போலீசார் சிறப்பாக செய்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2023-08-25 14:41 GMT

நாகை,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் சட்டம், ஒழுங்குநிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, "பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு வரும் போது அவர்கள் நடத்தப்படும் விதத்தை வைத்து தான் காவல்துறையின் பிம்பம் கட்டமைக்கப்படும். அதை உணர்ந்து பொறுப்புடனும், கணிவுடனும் போலீசார் நடந்து கொள்ள வேண்டும்.

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தி, போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுவரை மாநிலத்தில் அமைதியை காக்கும் பணியை போலீசார் சிறப்பாக செய்து வருகின்றனர். அது இனிமேலும் தொடரவும், மேம்படவும் வேண்டும்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்