போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரியும் மாடுகள்
ஆற்காடு, வாலாஜாவில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றி திரிகின்றன.
ஆற்காடு
ஆற்காடு அண்ணா சாலை, பஸ் நிலையம், எம்.ஜி.ஆர். சாலை, புதிய வேலூர் மெயின் ரோடு, தொல்காப்பியர் சாலை, ஜீவானந்தம் சாலை ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சாலைகள் ஆகும்.
பெரும்பாலான மாணவர்கள் இந்தச் சாலைகள் வழியாகத்தான் பள்ளிக்கு வர வேண்டும். காலை, மாலை வேளைகளில் இந்தச் சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
இதேபோல் வாலாஜா நகராட்சி பகுதியில் ஆங்காங்கே தேசிய நெடுஞ்சாலை உள்பட பிரதான சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன.
அந்த மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறும், நெரிசலும் ஏற்படுகிறது. ஒருசில நேரத்தில் விபத்துகளும் நடக்கின்றன.
எனவே, மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.