பொய்கை வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை

பொய்கை வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனையானது.

Update: 2023-04-18 18:17 GMT

பொதுமக்கள் தங்கள் கால்நடைகளையும், விவசாயிகள் பயிரிடும் விளைபொருட்களையும் பொய்கை வாரச்சந்ைதக்கு கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் கறவை மாடுகள், உழவு மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அவைகளை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் இறைச்சிக்காகவும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்காகவும் கறவை மாடுகளை வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று பொய்கை வாரச்சந்தை காலை 6 மணி முதல் தொடங்கியது. பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த கறவை மாடுகளை விவசாயிகள் வாங்கிச்சென்றனர். ஆயிரத்திற்கும் குறைவான மாடுகளே விற்பனைக்கு வந்ததாகவும், ரூ.1 கோடிக்கு மேல் வியாபாரம் நடந்ததாகவும் ஏலதாரர் ஒருவர் கூறினார்.

மேலும் இங்கு அடிப்படை வசதிகளான கழிவறை வசதிகள் உள்ளிட்டவை எதுவும் இல்லாததால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக கழிவறை வசதி, சுகாதாரமான காய்கறி மேடை உள்ளிட்ட கடைகளை அமைத்துத் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்க வைக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்