இரவில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
நன்னிலம் அருகே இரவில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
நன்னிலம்;
திருவாரூர்- மயிலாடுதுறை நெடுஞ்சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை ஆகும். இந்த சாலையில் இரவு நேரங்களில் சொரக்குடி, கங்களாஞ்சேரி, வண்டாம்பாளை, சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் நடுவே மாடுகள் நின்று கொண்டு இருப்பதால் அவ்வப்போது மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மாடுகள் மீது மோதி காயமடைகிறாா்கள். இதனால் பொதுமக்கள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள். எனவே சாலைகளை ஆக்கிரமித்து திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.