விளைநிலங்களில் சுற்றித்திரியும் மாடுகள்
வேதாரண்யம் பகுதியில் விளைநிலங்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மானாவரி பிரதேசமான இந்த பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. மேலும் வயல்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நகர் பகுதியில் வியாபாரிகள் தங்கள் பொருட்களை வைக்கும் போது அதை கால்நடைகள் தின்று சேதப்படுத்துகிறது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, விளை நிலங்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்துபட்டியில் அடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.