போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள்
சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிக அளவு மாடுகள் சுற்றித்திரிவதால் மாடுகளை பிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதுபாவாசத்திரம்,
சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிக அளவு மாடுகள் சுற்றித்திரிவதால் மாடுகளை பிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் திரியும் மாடுகள்
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் கொள்ளுக்காடு முதல் கட்டுமாவடி வரை இரவில் ஏராளமான மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகிறது. பகல் நேரங்களில் கடற்கரை ஓரங்களில் மேய்ந்து திரியும் மாடுகள் மாலை 6 மணிக்கு மேல் சாலையோரம் தஞ்சமடைகிறது. இரவு 10 மணிக்கு இந்த மாடுகள் சாலையின் நடுவில் படுத்துவிடுகிறது. இதனால் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் விரைவு பஸ், சுற்றுலா பஸ், கார்கள் முதல் இரு சக்கர வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களும் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
அபராதம்
மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை கட்டி வைத்து பராமரித்தால் விபத்துகளை தடுக்கமுடியும். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.