புளுதியூர் சந்தையில் ரூ.38 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

Update: 2023-05-03 18:45 GMT

அரூர்:

அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடந்து வருகிறது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடு, மாடு மற்றும் கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. நேற்று நடைபெற்ற சந்தையில் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். ஒரு மாடு ரூ.8 ஆயிரத்து 700 முதல் ரூ.43 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்து 600 முதல் ரூ.12 ஆயிரத்து 600 வரை விலை போனது. மொத்தம் ரூ.38 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்