3 கன்றுகளை ஈன்ற பசுமாடு

லால்குடி அருகே பசுமாடு ௩ கன்றுகளை ஈன்றது;

Update: 2023-07-03 19:02 GMT

திருச்சி,

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புதூர் உத்தமனூர் தென்னமர சோலையை சேர்ந்தவர் பழனிவேல். விவசாயியான இவர் 5 பசுமாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று 3 கன்றுகளை அடுத்தடுத்து ஈன்றது. தற்போது அந்த 3 கன்றுகளும், பசுமாடும் ஆரோக்கியமாக உள்ளது. பொதுவாக பசுமாடு ஒரு கன்று தான் ஈனும். ஆனால் 3 கன்றுகளை ஈன்றதால் அப்பகுதி மக்கள் வந்து பசு மாட்டையும், கன்றுகளையும் அதிசயமாக பார்த்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்