கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மாடு
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மாடு மீட்கப்பட்டது.;
தொண்டி,
திருவாடானை தாலுகா பதனக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆரணி. இவருக்கு சொந்தமான சினை மாடு மேய்ச்சலுக்கு சென்றபோது அந்த கிராமத்தில் இருந்த கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆரணி மற்றும் அக்கம்பக்கத்தினர் மாட்டை மீட்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் மீட்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மாட்டை உயிருடன் மீட்டனர்.