மின்சாரம் தாக்கி மாடு சாவு
குலசேகரன்பட்டினம் அருகே மின்சாரம் தாக்கி மாடு செத்தது
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள மாதவன்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜெகதீபன் (வயது 40). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதுடன், மாடுகள் வளர்க்கும் தொழிலும் செய்து வருகிறார். வழக்கமாக காலையில் மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டு மாலையில் மாடுகள் வீடு திரும்பும். இதில் பசு மாடு ஒன்று நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து நேற்று காலை ஜெகதீபன் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அப்போது மாதவன்குறிச்சி கீழூர்குத்துப்பிறை இசக்கியம்மன் கோவில் முன்பு மின்வயரில் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது.
இதுகுறித்து ஜெகதீபன் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த பசுமாட்டின் மதிப்பு ரூ. 50ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.