மின்சாரம் தாக்கி பசுமாடு சாவு

ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழந்தது.

Update: 2023-04-04 19:50 GMT

ஒரத்தநாடு:

ஒரத்தநாட்டை அடுத்துள்ள குலமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் அசோகன் (வயது50). விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள அசோகனின் வயலில் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது வயலின் மேலே சென்ற மின்கம்பி திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி பசுமாடு இறந்தது. இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்