நாமக்கல்லில் 2 கன்றுக்குட்டிகளை ஈன்ற பசு
நாமக்கல்லில் 2 கன்றுக்குட்டிகளை ஈன்ற பசு
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட காவேட்டிப்பட்டியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 4 மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு பசுவுக்கு காவேட்டிப்பட்டி கால்நடை மருத்துவமனையில் சினை ஊசி போடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருந்த அந்த பசு நேற்று 2 கன்றுக்குட்டிகளை ஈன்றது. இதனால் மாதேஸ்வரன் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த கன்றுகளை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்வையிட்டு சென்றனர். வழக்கமாக பசு ஒரு கன்றை மட்டுமே ஈனும் என கால்நடை துறையினர் தெரிவித்தனர்.