மொபட்டில் இருந்து தவறி விழுந்த கோர்ட்டு ஊழியர் சாவு
விழுப்புரம் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த கோர்ட்டு ஊழியர் சாவு
செஞ்சி
விழுப்புரம் அருகே உள்ள சிறுவாலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 53). விழுப்புரம் சார்பு நீதிமன்றத்தில் தற்காலிக இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த இவர் நேற்று காலை தனது மொபட்டில் அன்னியூர் சூரப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அரும்புலி சுடுகாடு அருகே வந்தபோது செல்வராஜ் நிலை தடுமாறி மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி அலமேலு கொடுத்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.