நீதிமன்ற வழக்குகளை சமரசமாக தீர்த்துக்கொள்ள வேண்டும்

நீதிமன்ற வழக்குகளை சமரசமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பேசினார்.

Update: 2023-06-18 22:00 GMT

ஊட்டி

தமிழ்நாடு சமரச மையம் மற்றும் நீலகிரி மாவட்ட சமரச மையம் சார்பில் முத்தரப்பு கூட்டம் மற்றும் கருத்து பரிமாற்றம் நிகழ்ச்சி ஊட்டி காக்காதோப்பில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சமரச குழு உறுப்பினரும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியுமான இளந்திரையன் தலைமை தாங்கி பேசும்போது, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சமரசமாக தீர்த்துக் கொள்வதால் இருதரப்பும் பயன் பெறலாம். மேலும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறையும். எனவே, வழக்குகளை சமரசமாக முடித்துக் கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றார்.

இதில் தமிழ்நாடு சமரச மைய பயிற்சியாளர் ஷீலா ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு சமரசத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் மகாதேவன், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட நீதிபதி அப்துல் காதர், மாவட்ட சமரச மைய தலைவர் ஸ்ரீதரன், சமரச மைய ஒருங்கிணைப்பாளர் லிங்கம் மற்றும் வக்கீல்கள் சந்திர போஸ், ரேவதி, விஜயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்