கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

ஆய்வு செய்வதை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-02-23 07:15 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார், 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

இந்த வழக்கில் தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. கோடநாடு பங்களாவில் நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊட்டி கோர்ட்டில் கோடநாடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி அளித்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தடயங்களை அழிக்கக்கூடாது, மாற்றக்கூடாது என்ற நிபந்தனையுடன், ஆய்வு செய்வதை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்