2-வது நாளாக வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

Update: 2022-10-15 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி வக்கீல் சங்கத்தினர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டும். தர்மபுரியில் உள்ள கோர்ட்டுகளில் காலியாக இருக்கும் நீதிபதி பணி இடங்களை நிரப்ப வேண்டும். வக்கீல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும். வக்கீல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரியில் வக்கீல்கள் நேற்று 2-வது நாளாக கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.

மேலும் செய்திகள்