ராசிபுரத்தில் மக்கள் நீதிமன்றம்: 46 கடன் வழக்குகளுக்கு சமரச தீர்வு

ராசிபுரத்தில் மக்கள் நீதிமன்றம்: 46 கடன் வழக்குகளுக்கு சமரச தீர்வு

Update: 2022-06-17 18:07 GMT

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குணசேகரன், ராசிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான தீனதயாளன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி வங்கியின் கடன் வழக்குகளுக்கு சமரச தீர்வு காணும் மக்கள் நீதிமன்றம் ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சுமார் 46 வங்கி கடன் வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜாராம், வக்கீல் செல்வகுமார், சமூக பணியாளர் சுந்தரேசன் ஆகியோர் மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக கலந்து கொண்டு வங்கிக்கடன் வழக்குகளுக்கு சமரச தீர்வு காண செய்தனர். மொத்தம் 46 வழக்குகளுக்கு சுமார் ரூ.53 லட்சத்து 52 ஆயிரத்து 700 தொகையானது தீர்வு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்