தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா வளப்பிரமன்காடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 45), விவசாயி. இவர் தனது மனைவி ராஜலெட்சுமியுடன் (40) கீரமங்கலம் அருகே நகரம் கிராமம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் சந்திரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தம்பதி படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் சரக்கு வாகனம் மூலம் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.