மகன் மீது தம்பதி புகார்

சொத்தை அபகரித்து விட்டதாக மகன் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

Update: 2023-04-03 17:44 GMT

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வயதான தம்பதி கோரிக்கை மனுவுடன் வந்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தவசிமடை சடையன்களம் பகுதியை சேர்ந்த விவசாயி ஆரோக்கியசாமி (வயது 65), அவருடைய மனைவி மரிய பாக்கியம் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு சொந்தமான நிலத்தை இளைய மகன் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் அபகரித்துவிட்டதாகவும், தங்களை அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்தனர்.

சாணார்பட்டி போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர்கள் கூறினர். பின்னர் அவர்களை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை குறித்து மனு கொடுக்கும்படி கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதேபோல் ஆத்தூர் தாலுகா பழைய வக்கம்பட்டியை சேர்ந்த நாகம்மாள் (60) என்பவர் கொடுத்த மனுவில், நான் வசிக்கும் வீட்டை சிலர் அபகரித்ததுடன் என்னையும் அடித்து துரத்திவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்