தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்ெகாைல செய்து கொண்டனர்.;
பேட்டை:
நெல்லை அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
அரிசி ஆலை உரிமையாளர்
நெல்லைைய அடுத்த பழவூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). இவர் அரிசி ஆலை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ராதிகா (37).
இவர்களுக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் அவர்கள் மனவருத்தத்தில் இருந்து வந்தனர்.
பிணமாக கிடந்தனர்
நேற்று காலை இவர்களது வீட்டில் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தனர்.
அப்போது அங்கு ராதிகா தரையிலும், ஆறுமுகம் தூக்கிலும் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதுகுறித்து சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
ராதிகா முதலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம். பின்னர் அதை பார்த்த ஆறுமுகம் அவரது உடலை கீழே இறக்கி வைத்து விட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
சோகம்
இதையடுத்து தம்பதியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.