கஞ்சா, மதுபாட்டில்கள் பதுக்கிய தம்பதி கைது
கருமத்தம்பட்டி அருகே கஞ்சா, மதுபாட்டில்கள் பதுக்கிய தம்பதி கைது
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே அரசு அனுமதி இன்றி மதுபானம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் சந்திரா புரம் அருகே ஆறுமுகம் என்பவரது பெட்டி கடையில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விற்பனைக்காக 90 மதுபான பாட் டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு பதுக்கி வைத்து இருந்த 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் பதுக்கிய செலம்பராயன்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது49), அவருடைய மனைவி ஜோதிமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு உடந்தையாக இருந்த அவர்களுடைய மகன் சத்தியசீலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.