பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதி கைது

பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதி கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-16 22:32 GMT

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர்.எம்.எஸ். காலனி பகுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது, ஒரு வீட்டில் ஒரு பெண்ணை வைத்து ஒரு தம்பதி விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தஞ்சாவூரை சேர்ந்த அந்த பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். புரோக்கர்களாக செயல்பட்ட முகமது இப்ராகிம் (வயது 30), அவருடைய மனைவி நிஷா (29) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்