நாட்டு நலப்பணி திட்ட முகாம்

அம்பையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.

Update: 2023-10-11 20:22 GMT

அம்பை:

அம்பை ஏ.வி.ஆர்.எம்.வி. அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற 7 நாள் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. அம்பை, ஊர்க்காடு பகுதியில் நடைபெற்ற இந்த முகாமை நகர்மன்ற தலைவர் கே.கே.சி.பிரபாகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, தூய்மை இந்தியா திட்டம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கண் சிகிச்சை முகாம் உள்ளிட்டவை நடைபெற்றன.

நிறைவு விழாவில் முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் சான்றிதழ்கள் வழங்கினார். துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம் செய்திருந்தார். தலைமை ஆசிரியர் கடலரசி, உதவி தலைமை ஆசிரியர் முருகன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் செலின்மேரி ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்