நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

சுரண்டை அருகே நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.;

Update: 2023-03-14 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்-191 சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் குலையநேரி கிராம பஞ்சாயத்து பகுதியில் நடந்தது. குலையநேரி கிராம பஞ்சாயத்து தலைவி சீதா பாலமுருகன் தலைமை தாங்கினார்.

ஆனைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராஜ், பேராசிரியர் செல்வகணபதி, கவுன்சிலர் முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சி.அருள் முகிலன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சின்னத்தாய் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகள் தூய்மை பணியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் நாட்டு நலப்பணித் திட்ட செயல்பாடுகள் குறித்து பொது மக்களுக்கு விளக்கி கூறினர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.



Tags:    

மேலும் செய்திகள்