நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
பூம்புகார் மேலையூர் அரசு உதவி பெறும் சீனிவாசா மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்;
திருவெண்காடு.நவ.2-
பூம்புகார் மேலையூர் அரசு உதவி பெறும் சீனிவாசா மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.. திட்ட அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். இதில் பூம்புகார் கண்ணகி கோவில் காப்பாளர் ராஜசேகரன் முகாமை தொடங்கி வைத்தார். முதல் நாளில் மேலையூர் பிரியா விடகேஸ்வரர் கோவிலில் மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் ராஜமோகன் நன்றி கூறினார்.