கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.24½ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.24½ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்

Update: 2023-08-27 21:26 GMT

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,392 மூட்டைகளில் நாட்டு சர்க்கரையை கொண்டுவந்தனர்.

இதில் 60 கிலோ மூட்டை திடம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 720-க்கும், அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்து 750-க்கும், மீடியம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரத்து 600-க்கும், அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்து 620-க்கும் ஏலம் போனது. மொத்தம் 927 மூட்டைகளில் 55 ஆயிரத்து 620 கிலோ எடையுள்ள நாட்டு சர்க்கரை ரூ.24 லட்சத்து 58 ஆயிரத்து 780-க்கு பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகத்தினர் கொள்முதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்