மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு; கணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
செங்கோட்டை அருகே மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதான கணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 33). சம்பவத்தன்று இவர் தனது மனைவி கவுசல்யாவுடன் ஏற்பட்ட தகராறில் அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசினார். இதுதொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தனகுமாரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பரிந்துரையின் பேரில், சந்தனகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அதற்கான ஆணையை செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் பாளையங்கோட்டை சிறையில் சமர்ப்பித்தார்.