பைரவர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

தகட்டூர் பைரவர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.;

Update: 2023-09-26 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பைரவர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் கடந்த 17-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. குடமுழுக்கையொட்டி பைரவர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது காணிக்கையை செலுத்துவதற்காக உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டன. பின்னர் இந்த உண்டியல்களில் பக்தர்கள் அளித்திருந்த நன்கொடைகள் மற்றும் பணம், சில்லறை காசுகள் எண்ணப்பட்டன. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கவியரசு, எழுத்தர் கார்த்தி மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்