'நீட்' தேர்வு மைய அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

காட்பாடியில் ‘நீட்’ தேர்வு மைய அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-05-06 17:52 GMT

காட்பாடி

காட்பாடியில் 'நீட்' தேர்வு மைய அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழகத்தில் நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து தேர்வுமைய முதன்மை கண்காணிப்பாளர்கள், துணை முதன்மை கண்காணிப்பாளர்கள், பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காட்பாடி சிருஷ்டி சி.பி.எஸ்.இ. பள்ளியில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு நீட் தேர்வு மைய வேலூர் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.சரவணன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர், நீட் தேர்விற்கு வரும் மாணவர்களிடம் அலுவலர்கள் கெடுபிடி காட்டக் கூடாது. மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்து வந்தால் அதனை வெட்டக்கூடாது. மடித்து விட சொல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துணை முதன்மை கண்காணிப்பாளர்கள், பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்