சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
வடவள்ளி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
மாணவர் சேர்க்கை
தமிழ்நாடு வேளாண்மை பல்லைக்கழகத்தின் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படு கின்றன. இதில், 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
உறுப்புக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 148 இடங்கள், இணைப்பு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 337 இடங்களுக்கு மொத்தம் 37 ஆயி ரத்து 766 மாணவ - மாணவிகள் விண்ணப்பம் செய்து இருந்தனா். இவா்களின் மதிப்பெண் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு கடந்த செப்டம்பா் 30-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
கலந்தாய்வு
இதையடுத்து மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், தேர்வு செய்யப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு சேர்க்கைக்கான அனுமதி கடிதங்களை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை) கலந்தாய்வு நடைபெறுகிறது.