திருவெண்ணெய்நல்லூரில்பேரூராட்சி கூட்டத்தில் துணைத்தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருவெண்ணெய்நல்லூரில் பேரூராட்சி கூட்டத்தில் துணைத்தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா்.

Update: 2023-05-11 18:45 GMT


திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் அஞ்சுகம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், சில தீர்மானங்கள் மற்றும் பொதுமக்களின் குறைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசியதற்கு சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால், துணைத்தலைவர் ஜோதி, கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, வெளியே வந்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இது குறித்து பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசனிடம் கேட்டபோது, அவர் பேரூராட்சி மன்ற கூட்டம் வெறொரு நாளில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்