நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
செங்கோட்டை நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.;
செங்கோட்டை:
செங்கோட்டை நகர்மன்ற கூட்டரங்கில் புதிய சொத்துவரி உயர்வு சம்பந்தமாக அவரசக்கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, பொறியாளா் ஜெயப்ரியா, மேலாளா் ரத்தினம், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் 5-வது வார்டு கவுன்சிலர் ஜெகன், கூட்டத்திற்கான அஜெண்டா தனக்கு காலதாமதமாக வந்ததை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
அதனைதொடர்ந்து தி.மு.க. உறுப்பினா்கள் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை சரிவர தீர்க்காமலும், பாரபட்சமாக நடப்பதாகவும் கூறி எஸ்எம்.ரஹீம் தலைமையில் வெளிநடப்பு செய்தனா். இதையடுத்து பா.ஜனதா உறுப்பினா்கள் தமிழக அரசின் புதிய சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்தனா். அதனைதொடா்ந்து புதிய சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலா்கள் பலர் கலந்து கொண்டனா்.