நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் தர்ணா போராட்டம்

பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-12-23 17:35 GMT

பேரணாம்பட்டு நகராட்சி 9-வது வார்டில் தி.மு.க. கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஆலியார் சுல்தான் என்பவர் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் நேற்று மாலை திடீரென தனது ஆதரவாளர்களுடன் சென்று நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தனது வார்டில் குடிநீர் பைப் லைனில் தண்ணீர் கசிந்து தெருக்களில் குடிநீர் வீணாகி வருவதை நகராட்சி பணியாளர்களிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், குப்பை கழிவுகள் தேங்கியுள்ளதை அகற்றப்படவில்லை, கழிவு நீர் கால்வாய் தூர் எடுக்கவில்லை அடிப்படை என்று கூறியும், அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும், நகராட்சி எலெக்ட்ரீஷியன் பொது மக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி வருவதால் இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

தகவலறிந்த நகரமன்ற துணை தலைவர் ஆலியார்ஜூபேர் அஹம்மத் விரைந்து வந்து, 2 நாட்களில் குப்பை கழிவுகளை அகற்றி, கால்வாய் தூர் எடுக்கப்படும், அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும் உறுதியளித்தார், இதனை ஏற்று கவுன்சிலர் ஆலியார் சுல்தான் தனது தர்ணா போராட்டத்தை கைவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்