சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் டிசம்பர் 28ம் தேதி நடைபெறும் - மேயர் பிரியா
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் டிசம்பர் 28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் டிசம்பர் 28ம் தேதி நடைபெறும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார். மேலும், சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மேயர் பிரியா கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜனவரி 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் உரையுடன் தொடங்கும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இடம் பெறும் அம்சங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது.