மேயர் பிரியா தலைமையில் மாமன்ற கூட்டம்: செல்போனில் கேம் விளையாடிய உறுப்பினர்..!
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தின்போது திமுக உறுப்பினர் செல்போனில் கேம் விளையாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.;
சென்னை,
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தின்போது திமுக உறுப்பினர் செல்போனில் கேம் விளையாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நேற்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றி வந்தனர். அப்போது அங்கிருந்த திமுக மாமன்ற உறுப்பினர் சமீனா செல்வம் தனது செல்போனில் கேம் விளையாடி உள்ளார்.
மாநகராட்சி தொடர்பான முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படும்போது மாமன்ற அரங்கில் அவர் கேம் விளையாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.