ரூ.1¾ கோடிக்கு பருத்தி விற்பனை

ரூ.1¾ கோடிக்கு பருத்தி விற்பனை

Update: 2023-05-27 13:32 GMT

மூலனூர்

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 802 விவசாயிகள் பருத்தி கொண்டு வந்திருந்தனர். திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். ஏலத்தில் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.78.19-ற்கும், குறைந்தபட்சவிலை ரூ.55-ற்கும் விற்பனையானது. அதன்படி ரூ. 1 கோடியே 71 லட்சத்து 52 ஆயிரத்து 977-க்கு ஏலம்போனது. இந்த தகவலை திருப்பூர் விற்பனைக் குழு முதுநிலை செயலாளர் சுரேஷ் பாபு தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

---------------

Tags:    

மேலும் செய்திகள்