ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6,539-க்கு ஏலம்

பாபநாசத்தில், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6,539-க்கு ஏலம் போனது.

Update: 2023-07-08 20:30 GMT

பாபநாசம்;

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. தஞ்சாவூர் விற்பனை குழு செயலாளர் சரசு தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் தாட்சாயினி விற்பனை மேலாளர் சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சராசரியாக 2ஆயிரத்து906 குவிண்டால் பருத்தி ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது.

கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், குத்தாலம், சேலம், தேனி, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து 15 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6ஆயிரத்து539-க்கும் குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.5ஆயிரத்து879-க்கும் ஏலம் போனது. 

Tags:    

மேலும் செய்திகள்