பருத்தி வியாபாரிகள் சங்க கூட்டம்

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2022-06-27 20:57 GMT

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் தலைமை தாங்கினார். வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு, கண்காணிப்பாளர் பிரியமாலினி, வருவாய் ஆய்வாளர் சசிக்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பருத்தி வியாபாரிகள் சங்க செயலாளர் கலியமூர்த்தி, விவசாய சங்க பிரதிநிதி பாக்கியநாதன் மற்றும் வியாபாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பருத்தி வியாபாரிகள் பேசுகையில், மறைமுக ஏலத்தில் பங்கேற்கும் வியாபாரிகளை விவசாயிகள் தரக்குறைவாக பேசுவதை தவிர்க்க வேண்டும். வியாபாரிகளும், விவசாயிகள் தான் என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். மறைமுக ஏலத்தில் கலந்துகொள்ளும் வியாபாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் பேசுகையில், வியாபாரிகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்படும். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை வெயிலில் நன்கு காயவைத்து விற்பனைக்கு கொண்டு வரவேண்டும். ஈரப்பதம் இருந்தால் விலை குறைவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்