போதிய விலை கிடைக்காததால் பருத்தி விவசாயிகள் கவலை
போதிய விலை கிடைக்காததால் பருத்தி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காரையூர் அருகே உள்ள சடையம்பட்டி, கொன்னையம்பட்டி, இடையாத்தூர், மேலத்தானியம், கீழத்தானியம், எம்.உசிலம்பட்டி, சூரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் அறுவடைக்கு பிறகு பருத்தி விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு ஒருகிலோ பருத்தி ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் இந்த ஆண்டு அதிக லாபம் கிடைக்கும் என நம்பி ஏராளமான விவசாயிகள் பருத்தியை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு கிலோ பருத்தி ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.