தொடர் மழையால் பருத்தி மகசூல் பாதிப்பு

தொடர் மழையால் பருத்தி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-30 16:34 GMT

கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்வதும், பின்னர் வெயில் அடிப்பதுமாக இருந்து வருகிறது. இன்று  காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் அடித்தது. வெப்பத்தின் தாக்கமும் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் திடீரென வானில் மேகங்கள் சூழ்ந்தன. இதனையடுத்து லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் படிப்படியாக அதிகரித்து பலத்த மழை கொட்டியது. கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், வடபாதிமங்கலம், குலமாணிக்கம், பள்ளிவர்த்தி, திருராமேஸ்வரம், பழையனூர், நாகங்குடி, பாரதிமூலங்குடி, சித்தனங்குடி, ஓகைப்பேரையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. கூத்தாநல்லூர் பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், பருத்தி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்