செம்பனார்கோவிலில் நடந்த பருத்தி ஏலத்தை தடுத்து நிறுத்திய விவசாயிகள்
விற்பனை செய்யப்பட்ட பருத்திக்கான தொகையை வழங்கக்கோரி செம்பனார்கோவிலில் நடந்த பருத்தி ஏலத்தை தடுத்து நிறுத்திய விவசாயிகள்
பொறையாறு:
தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது கடந்த மாதம் 20-ந் தேதி நடந்த ஏலத்தில் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.2 கோடியே 96 லட்சத்து 66 ஆயிரம் மதிப்புள்ள 3 ஆயிரத்து 225 குவிண்்டால் பருத்தியை விவசாயிகள் விற்பனை செய்தனர். இதற்கான தொகையை கடந்த 7-ந் தேதிக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான இ-நாம் திட்டத்தில் ஏற்பட்ட சர்வர் கோளாறு காரணமாக 60 விவசாயிகளுக்கு தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒழுங்குமுைற விற்பனை கூடத்தல் நேற்று பருத்தி ஏலம் நடைபெற இருந்தது. இதனை அறிந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்த பருத்திக்கான தொகையை கொடுத்த பிறகு தான் ஏலத்தை நடத்தி, பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும் என கூறி பருத்தியை கொள்முதல் செய்ய வந்த வியாபாரிகளை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் ஏற்காததால் வியாபாரிகள் திரும்பி சென்றனர். இதனால் பருத்தி ஏலம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.