எடப்பாடி:-
கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். 3 ஆயிரத்து 500 மூட்டை பருத்தி 620 லாட்டுகளாக பிரித்து வைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. பி.டி. ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 250 முதல் ரூ.8 ஆயிரத்து 179 வரையும், டி.சி.எச். பருத்தி ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.8 ஆயிரம் வரையும், கொட்டு ரக பருத்தி ரூ.4 ஆயிரத்து 600 முதல் ரூ.5 ஆயிரத்து 630 வரையும் ஏலம் போனது. மொத்தம் ரூ.86 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.