ரூ.4 கோடிக்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரத்தில் ரூ.4 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2022-07-30 22:58 GMT

எடப்பாடி:

எடப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பருத்தி அறுவடை தீவிரமடைந்துள்ளது. இதனால் கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்த்தில் ஏலத்துக்காக பருத்தி அதிகளவில் கொண்டு வரப்படுகிறது. நேற்று நடந்த ஏலத்துக்கு 10 ஆயிரத்து 200 மூட்டை பருத்தி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 900 முதல் ரூ.12 ஆயிரத்து 269 வரை விற்பனையானது. மொத்தம் ரூ.4 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்