கொளத்தூரில்ரூ.35½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
கொளத்தூரில் ரூ.35½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்போனது.;
மேட்டூர்
கொளத்தூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. கொளத்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் பருத்தியை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதன் அடிப்படையில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.5,200 வரை விற்பனையானது. மொத்தம் 1,516 மூட்டை பருத்தி ரூ.35 லட்சத்து 63 ஆயிரத்து 850-க்கு விற்பனை ஆனதாக தெரிவிக்கப்பட்டது.