தேவூர்:-
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கமான கோனேரிபட்டி உப கிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. கோனேரிபட்டி, தேவூர், காவேரிப்பட்டி, குருவரெட்டியூர், குள்ளம்பட்டி, வட்ராம்பாளையம், பூமணியூர், ஒக்கிலிப்பட்டி, தண்ணி தாசனூர், கொட்டாயூர், நல்லதங்கியூர், கல்வடங்கம், சென்றாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.6,669 முதல் ரூ.7462 வரையிலும், கொட்டு ரக பருத்தி ரூ.4,509 முதல் ரூ5,609 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் 1,232 பருத்தி மூட்டைகள் ரூ.30 லட்சத்துக்கு ஏலம் போனது.