பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2023-06-30 21:27 GMT

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

ரூ.1 கோடி

அம்மாபேட்டையை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கொங்கணாபுரம், கோனேரிப்பட்டி, தேவூர், எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர், அந்தியூர், பவானி, சித்தார், அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4 ஆயிரத்து 499 மூட்டைகளில் பி.டி. ரக பருத்திைய விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஏலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் நடந்தது. பருத்தி குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 469-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 489-க்கும் என மொத்தம் ரூ.1 கோடியே 97 ஆயிரத்து 755-க்கு ஏலம் போனது. பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, அன்னூர், கோவை, கொங்கணாபுரம் அந்தியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து பருத்திைய வாங்கி சென்றனர்.

மேலும் தேங்காய், கொப்பரை தேங்காய், நிலக்கடலை, எள், மக்காச்சோளம் போன்ற விவசாய விளைபொருட்கள் ரூ.6 லட்சத்து 62 ஆயிரத்து 873-க்கு விற்பனை செ்யயப்பட்டது.

அந்தியூர்

இதேபோல் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 1,250 மூட்டை பருத்தி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது. இது ஒரு குவிண்டால் குறைந்த பட்ச விலையாக ரூ.6,050-க்கும், அதிக பட்ச விலையாக ரூ.7,016-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.27 லட்சத்து 66 ஆயிரத்து 550-க்கும் பருத்தி விற்பனையானது.

அதுமட்டுமின்றி தேங்காய், கொப்பரை தேங்காய், எள் போன்ற விவசாய விளைபொருட்களும் விற்கப்பட்டன.

கொடுமுடி

சாலைப்புதூரில் உள்ள கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் மொத்தம் ரூ.87 ஆயிரத்து 620-க்கும் கொப்பரை தேங்காய் ரூ.13 லட்சத்து 58 ஆயிரத்து 232-க்கும விற்பனையானது. எள் 24 மூட்டைகள் ஏலத்துக்கு வந்தன. இது (கிலோ) குறைந்தபட்ச விலையாக ரூ.112.79-க்கும், அதிகபட்சமாக ரூ.143.09-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 563-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னிமலை

சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு 8 ஆயிரத்து 290 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.18.07-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.20.17-க்கும் ஏலம் போனது. மொத்தம் 4 ஆயிரத்து 30 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 76 ஆயிரத்து 881 ரூபாய்க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்